வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் உதயநிதி உறுதி

by Editor News

வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் முழுதாக நிறைவுற்றதும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ள பாதிப்பு விவகாரத்தில் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார்கள். என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை பார்க்க மத்திய அமைச்சின் நிர்மலா சீதாராமன் வர இருக்கிறார். பாதிப்புகளை அவர் நேரில் ஆய்வு செய்த பின்பு உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம் என கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கன மழையாலும் – பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். அப்போது, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் முழுதாக நிறைவுற்றதும், அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment