சிறிதளவு சர்க்கரையுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் பூசவும். பின்பு விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
உதடுகளுக்கு வாசனையில்லாத, ஒவ்வாமை ஏற்படுத்தாத லிப் பாம் உபயோகிப்பது சிறந்தது. கிளிசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்த லிப் பாம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாம்களை தவிர்ப்பது நல்லது. மென்தால், யூகலிப்டஸ், மெழுகு சேர்த்த்த லிப் பாம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். லிப் பாம், உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும். நீண்ட நேரம் உதடுகளை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப் பாம் பூசுவது நல்லது.