நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்ட பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக மாணவ மாணவிகள் தங்கள் நோட்டு புத்தகத்தை இழந்து உள்ளார்கள் என்பதும் பல மாணவர்கள் தங்குவதற்கு வீடு இல்லாத நிலையில் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்கள் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.