பொங்கல் ரெஸிபி…

by Editor News

தேவையான பொருட்கள் பச்சரிசி – 3/4 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் மிளகு -1 ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், பட்டர் – சிறிதளவு கருவேப்பிலை -1 கொத்து, பெருங்காயம் -1 பின்ச், முந்திரி – 10, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், பால் – 1/4 கப்,

செய்முறை :

இந்தப் பொங்கல் தாளிப்பதற்கு முதலில் பச்சரிசியும் பருப்பையும் நன்றாக சுத்தம் செய்து 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தயார் செய்த பிறகு அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து முதலில் தாளிப்பை செய்து விடலாம்.

பொங்கல் செய்ய அரிசி பருப்பு இரண்டையும் வேக வைத்த பிறகு கடைசியாக தான் தாளிப்பை சேர்ப்பார்கள். அப்படியில்லாமல் இந்த முறையில் செய்து பாருங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். குக்கர் சூடானவுடன் பட்டர் சேர்த்து உருகிய பிறகு மிளகு, சீரகம் இரண்டையும் கொஞ்சமாக நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கருவேப்பிலை முந்திரி இவைகளை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஊற வைத்த அரிசி பருப்பு இரண்டையும் தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு குக்கரில் சேர்த்து பட்டர் அரிசியின் எல்லா பக்கத்திலும் படும் வரை நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு ஒரு கப் அரிசி பருப்புக்கு 5 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் நான்கு கப் அளவு தண்ணீரும் ஒரு கப் அளவு பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காய்ச்சியப் பால், காய்ச்சாத பால் எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது குக்கரை உடனடியாக மூடி விடாமல் இவையெல்லாம் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி மூன்று விசில் வந்த பிறகு அடுப்பு அணைத்து விடுங்கள். இப்படி ஒரு கொதி வந்த பிறகு மூடுவதால் குக்கர் விசில் வரும் போது பொங்கி தண்ணீர் எல்லாம் வீணாக வெளியே வராது. அதன் பிறகு குக்கர் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்தால் நல்ல கமகமவென்று வாசத்துடன் குழைம வெந்த பொங்கல் தயார்.

Related Posts

Leave a Comment