கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் கேரளாவிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ல் இருந்து 768ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 312 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருமல், அசதி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரத்தன்மை குறித்து இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை அதிகப்படுத்த உத்தரவிட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.