குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறிப்பாக நவம்பர் மாதம் முதலே தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை தீவிரமடைய ஆரம்பித்தது. இடைவிடாமல் பெய்த ,மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மெயின் அருவி பகுதிகள் சேதமடைந்துள்ளன. தொடர் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.