சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.
மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை தினமும் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய காரணத்தினால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 86,450 பேர் சுவாமி தரிசனம்; தரிசனத்திற்காக ஆன்லைன் மற்றும் நேரடியாக இன்று 90,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர், ஒருமணி நேரத்தில் சுமார் 4,600 பேர் தரிசனம் செய்து வருன்றனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.