சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

by Column Editor

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே பணிமனையிலிருந்து புறப்பட்ட ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்ட நிலையில், அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தண்டவாளனங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பணிமனை அருகே ரயில் பெட்டி தடம் புரண்டதால் வழக்கமான ரயில் சேவையில் பாதிப்பு ஏதும் இல்லை. அதேபோல் வேறு எந்த வண்டிகளுக்கும் பாதிப்பு இல்லை என்றும் தெரிகிறது.

Related Posts

Leave a Comment