137
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
“புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருகிறது. கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பக தமிழ்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.