தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா இந்தியா?

by Editor News

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. மழை காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 12ம் தேதி 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அதில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியிலு வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்க அணிக்கு பதிலடி கொடுப்பதோடு தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment