66
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
காலி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.