90
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணைக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜோ பைடனுக்கு எதிரான ஊழல் பேரங்கள் தொடர்பாக இந்த பதவி நீக்கம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான பதவி நீக்க விசாரணைக்கான தீர்மானத்தின் மீது நேற்று (13) பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், அது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 221 வாக்குகளும், எதிராக 212 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.