அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒக்டோபரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 0.2 விகித வளர்ச்சிக்குப் பிறகு, பொருளாதாரம் ஒக்டோபர் மாதத்தில் 0.3 விகிதமாக சரிந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்தில் பாபெட் புயல் இங்கிலாந்தை தாக்கியதால் சில்லறை வணிகம் மற்றும் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் பொருளாதாரம் ஓரளவு மட்டுமே சுருங்கும் என கணித்த போதும் சேவைகள், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ள நிலையில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்த போதும் அடுத்தாண்டு ஜனவரியில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறப்படுகின்றது.