கர்ப்பத்தின் போது வைத்துக்கொள்ளும் உடலுறவு என்பது இதற்கு முன்பு இருந்ததை விட சற்று வித்தியாசமானது. குழந்தையை சுமக்கும் உங்கள் கர்ப்பப்பை சிறியதாக இருந்ததில் இருந்து இப்போது பெரியதாகி இருப்பதால் எல்லா விதமான பொசிஷன்களும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சௌகரியமாகவும் — நிறைவாகவும் — இருக்காது. எனவே, கர்ப்பமாக இருக்கும் முயற்சி செய்யக்கூடிய சிறந்த செக்ஸ் பொசிஷன்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். இது ஒரு ட்ரைமெஸ்டரில் இருந்து மற்றொன்றிற்கு மாறும்போது நீங்கள் எதையாவது தவிர்க்க வேண்டுமா அல்லது சௌகரியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த உதவும்.
கர்ப்ப காலத்தில் முயற்சி செய்து பார்க்கக்கூடிய பல சிறந்த பிரக்னன்சி செக்ஸ் பொசிஷன்கள் இருந்தாலும், அது குறித்து முதலில் உங்கள் துணையுடன் பேசி அவரது ஆலோசனையைப் பெறுவது நல்லது. சொல்லப்போனால், உடலுறவை சௌகரியமானதாகவும், வலி இல்லாததாவும் மாற்ற மனம் விட்டு பேசுதல் நிச்சயமாக ஒரு சிறந்த வழியாகும். உடலுறவுக்கு பிறகு அன்பாக கட்டியணைப்பது கணவன் மனைவி இடையே உள்ள உடல்சார்ந்த தொடர்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவும். இது இருவரையும் உடலுறவின்போது மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வைத்திருக்கும்
கர்ப்பமாக இருக்கும் போது முயற்சி செய்யக்கூடிய சிறந்த செக்ஸ் பொசிஷன்கள் :
உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் வரை எந்த ஒரு பொசிஷனும் சரியானது தான். உங்கள் அடி வயிற்றில் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்காமல் இருப்பதே இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் ஆகும். உங்கள் தாம்பத்ய உறவை இன்னும் சுவாரஸ்யமாக்க நீங்கள் சில செக்ஸ் டாய்களைக் கூட பயன்படுத்தி பார்க்கலாம்! இது குறித்த உங்கள் கணவரின் விருப்பங்கள் என்ன என்பதையும் அவருடன் பேசி தெரிந்து வைத்துக் கொள்ளவும்.
இருப்பினும் கர்ப்பத்தின் அடுத்தடுத்த மாதங்களுக்கு செல்லும் போது, உங்கள் வயிறு பெரிதாவதன் காரணமாக உடலுறவு கொள்வது சற்று கடினமாகிறது. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். வளர்ந்து வரும் வயிற்றை தொந்தரவு செய்யாமல் நீங்களும் உங்கள் கணவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய சில பொசிஷன்கள் உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கக்கூடிய சிறந்த செக்ஸ் பொசிஷன்களின் பட்டியல் இதோ!
பக்கவாட்டில் படுத்துக்கொள்ளும் பொசிஷன்கள் :
நீங்கள் முன்னும்-முன்னும் அல்லது முன்னும்-பின்னுமாக பார்த்தவாறு இருந்தாலும் பக்கவாட்டில் படுத்துக்கொள்வது மிகவும் சௌகரியமாக இருக்கும். இரண்டு ஆப்ஷன்களிலும் உங்கள் வயிற்றின் எடையைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். உங்கள் கீழ் முதுகில் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் உங்கள் முழங்கால்களுக்கு இடையே ஒரு தலையணையை வைக்க முயற்சி செய்யவும். மேலும் உங்களுக்கு பின் உங்கள் கணவர் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
பெண்கள் மேற்புறத்தில் :
புகழ்பெற்ற “கௌ கெர்ல்” பொசிஷன் இந்த நேரத்தில் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒரு சிறந்த பொசிஷன் ஆகும். இது உங்கள் வயிற்றிற்கு எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்காது. மேலும் ஆணுறுப்பு எந்த அளவு உள்ளே செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம்: கர்ப்பத்தின் பிந்தைய காலத்தில் வயிறு நீங்கள் நினைத்ததை விட பெரிதாகும் போது இந்த பொசிஷனை முயற்சி செய்வது சற்று கடினமானதாகி விடும். இதன்போது உங்கள் தோலின்மீது உங்கள் கணவரின் கையை வைக்க சொல்லி, ஆணுறுப்பு எவ்வளவு உள்ளே செல்ல வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இது உங்களை மேலும் உங்கள் கணவருடன் நெருக்கமாவதை உறுதி செய்யும்.
பின்புறத்தில் நுழைதல் :
உங்கள் கணவர் பின்புறத்தில் இருந்து நுழையும்போது உங்கள் வயிற்றை முழுவதுமாக தவிர்த்து விடலாம். சுவரின் முன் இரு கைகளையும் வைத்து நின்று கொள்ளலாம். அல்லது உங்கள் கணவரை ஒரு நாற்காலி மீது அமர சொல்லி நீங்கள் அவரின் மடியில் அமர்ந்து கொள்ளலாம். உங்கள் இரு கைகளையும், தலையையும் மெத்தை மீது வைத்தவாறு படுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் வயிற்றின் எடையை தாங்கி பிடிக்கத் தேவையில்லை. உங்கள் தாம்பத்ய உறவை மேலும் சுவாரஸ்யமாகவும், நெருக்கமாகவும் மாற்ற செக்ஸ் டாய்ஸ்களை வாங்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆண் மேற்புறத்தில் :
விரைவாக உடலுறவை முடித்துக் கொள்பவர்களுக்கு வழக்கமாக செய்யப்படும் மிஷனரி பொசிஷனை முயற்சி செய்யலாம். இருப்பினும் இதன்போது உங்கள் கணவர் அவரது எடையை உங்கள் மீது செலுத்தாமல் அவரது கைகளை வைத்தே எடையை பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். கைகளை ஃப்ரீயாக வைத்து கொள்ள உங்கள் கணவர் விருப்பப்பட்டால் கட்டிலின் முனைக்கு சென்று விடுவது சிறந்தது: முகுகு மெத்தையில் படுமாறு மல்லாக்க படுத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடலின் கீழ் பகுதி கட்டிலின் முனைக்கு வருமாறு கீழ்நோக்கி நகருங்கள். உங்கள் கால்களை கீழே தரையில் தொங்க விடுங்கள். உங்கள் கணவரை உங்கள் முன்னே முட்டிப்போட்டுக்கொள்ள சொல்லுங்கள். உங்கள் முதுகின் கீழ் ஒரு தலையணையை வைத்துக்கொள்வது ஏதேனும் அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கக்கூடிய சிறந்த செக்ஸ் பொசிஷன்களில் இதுவும் ஒன்று!
கர்ப்பமாக இருக்கும் போது நான் தவிர்க்க வேண்டிய செக்ஸ் பொசிஷன் என்ன?
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது உங்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும். இதைத்தவிர இந்த நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய எந்தவொரு பொசிஷனும் கிடையாது. எனினும், உங்கள் வயிறு அல்லது அடி வயிற்றில் அழுத்தம் தராத எந்த ஒரு பொசிஷனையும் நீங்கள் முயற்சி செய்யலாம். மேலும் உங்கள் உடலுறவின் நீங்கள் சௌகரியமாக இருப்பது மிகவும் முக்கியம்.
உங்கள் மருத்துவர் உங்களை எதுவும் எச்சரிக்காத வரை நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒன்று என்பது இல்லை. இரண்டாவது ட்ரைமெஸ்டர் ஆரம்பித்த பின்னரே உங்கள் வயிற்றில் அழுத்தம் கொடுக்கக்கூடிய எந்த ஒரு பொசிஷனையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, உங்கள் கணவர் நேரடியாக உங்கள் மீது படுப்பது அல்லது உங்கள் வயிற்றின் மீது படுப்பது மற்றும் நீங்கள் நீண்ட நேரம் மல்லாக்க படுக்க நேரும் எந்த ஒரு பொசிஷனையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
எனவே, கர்ப்பமாக இருப்பதற்கு முன் நீங்கள் முயற்சி செய்த எந்த ஒரு பொசிஷனையும் மீண்டும் முயற்சி செய்ய தயங்க வேண்டாம். மகிழ்ச்சியாக உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். குறிப்பாக, இது குறித்து உங்கள் கணவரின் ஆலோசனையையும் தெரிந்து வைத்துக்கொள்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது. உங்கள் படுக்கையறையில் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்யோன்யத்தை அதிகரிக்க உதவும்.
உடலுறவுக்கு பின் என்ன செய்ய வேண்டும்?
உடலுறவுக்கு பின் கட்டியணைப்பதும், முத்தமிடுவதும் உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை பல விதங்களில் மேம்படுத்த உதவும். உங்கள் கணவருடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபடுவது அல்லது உங்கள் வயிற்றை மசாஜ் செய்ய சொல்லி கேட்டுக் கொள்ளலாம். தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்தவும், கணவன் மனைவி இடையேயான பிணைப்பை அதிகரிக்கவும் ஒருவர் முயற்சி செய்யக்கூடிய வழிகளில் இவையும் சில.
உங்கள் துணை உடனான உறவை பலப்படுத்த இரவு நேர திரைப்படம் அல்லது இரவு டேட்டிங் போன்றவற்றை நீங்கள் திட்டமிடலாம். இது போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை மன அழுத்தம் இல்லாமலும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும். நாளின் முடிவில் உங்கள் கர்ப்ப காலம் என்பது நீங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு பயணமாகும்!