இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆகவே வடக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டுக்குச் சென்று இந்த விடயம் குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இராஜதந்திர ரீதியில் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அவை பயனளிக்கவில்லை என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அதுகுறித்து முறைப்பாடுகள் வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வடக்கிலுள்ள கடற் தொழிலாளர்கள் ஒருகுழுவாக தமிழ்நாட்டுக்கு சென்று இங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன், மாநில அரசாங்கத்துடன் நாம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்திய அரசாங்கத்துடன் பேசினால் தீர்வு ஒன்று கிடைக்கும் என கூறியிருந்தார்.