திருப்பதியில் இனி திருப்பாவைதான் ஒலிக்கும்….

by Editor News

திருப்பதி கோயிலில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் திருப்பாவைதான் ஒலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஷ்ணவ கோவில்களில் அதிகாலை வேலையில் பிரதிபாதி பயங்கர் இயற்றி எழுதிய கௌசல்யா சுப்ரஜா என்று துவங்கும் சுப்ரபாத பாடலை பாடி மூலவர்களை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றி பாடிய திருப்பாவையில் உள்ள 30 பாடல்களையும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒன்றொன்றாக பாடி மூலவர்களை துயில் எழுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இம்மாதம் 17ஆம் தேதி மார்கழி மாதம் துவங்க இருக்கும் நிலையில் அன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட நாட்டில் உள்ள அனைத்து வைஷ்ணவ கோவில்களிலும் திருப்பாவை பாடல்களை பாடி மூலவர்களை 30 நாட்களும் துயில் எழுப்புவார்கள்.

இமாதம் 17ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் திருப்பாவை பாடப்படும். சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு கட்டணம் அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும். ஆனால் திருப்பாவை சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சியானது மார்கழி மாதம் பிறப்பு துவங்கி, தை மாத பிறப்புக்கு முதல்நாள் வரை சிறப்புற நடைபெறும் என்பது குறிபிடத்தக்கது.

Related Posts

Leave a Comment