சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,835க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560/- குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து , தங்கம் ஒரு கிராம் ரூ.5,765/-க்கு விற்பனையாகியது. ஒரு சவரன் ரூ.46,120/-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹46,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ₹5750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.