இந்தியாவில் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு இரத்த அழுத்தம் பிரச்சனை அதிகரிப்பதாக தகவல்..

by Editor News

சீனா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தம்பதியரில் யாரேனும் ஒருவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய பார்ட்னருக்கும் வெகு விரைவில் ஹைப்பர்டென்சன் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகிறது என்று தெரிறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு விவரங்களை அமெரிக்க இதய நலக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் உயர் ரத்த அழுத்தம் கொண்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் அதே பாதிப்பு விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஹைப்பர்டென்சன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கும் அதே பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் 47.1 சதவீத தம்பதியர்களும், அமெரிக்காவில் 37.9 சதவீத தம்பதியர்களும், சீனாவில் 20.8 சதவீத தம்பதியர்களும், இந்தியாவில் 19.8 சதவீத தம்பதியர்களும் இதுபோல பரஸ்பர ரத்த அழுத்த பாதிப்பை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கின்றனர்.
விக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் தம்பதியர்களிடம் இதுகு

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம், எமோரி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மற்றும் சீனாவில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கலாச்சார நிர்பந்தங்களும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தம்பதியர்கள் இடையே நடைபெறும் உரையாடல்கள் மற்றும் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்ற வாழ்வியல் நடவடிக்கைகள் ஆகியவை உயர் ரத்த அழுத்தம் ஏற்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆய்வாளர் பெயி லுயி கூறுகையில், “சீனா, இந்தியாவை ஒப்பிடுகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு மிக அதிகமாகும். எனினும், தம்பதியர்கள் இடையே பரஸ்பர அடிப்படையில் இந்த பாதிப்பு ஏற்படும் சூழல் இந்தியாவிலும், சீனாவிலும் தான் அதிகம். அதற்கு ஒரே காரணம் கலாச்சார நிர்பந்தம் தான்’’ என்று தெரிவித்தார்.

ரத்த அழுத்தம் குறைய…

தினசரி உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கம் ஆகியவை மூலமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பாக நைட்ரிக் அமிலம், பொட்டாசியம் சத்து மிகுந்த பீட்ரூட், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

Related Posts

Leave a Comment