நைட் ஷிப்ட் பணி செய்பவர்கள் தூக்கம் இல்லாமல் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்களை விட பெண்கள் இரவு நேரத்தில் வேலை செய்வதால் புற்றுநோய் அபாயத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதனால் இரவு நேர வேலையை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.
மாதம் முழுவதும் இரவு நேர வேலை பார்க்கும் பார்ப்பதை விட மாதம் ஒரு நாள் மட்டும் இரவு வேலை பார்த்தால் பிரச்சனை இருக்காது என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல் வெளிப்பட்டு உடல் மனது சோர்வடையும் என்றும் நீங்கள் எவ்வளவுதான் கவனமாக வேலை பார்த்தாலும் சில தடுமாற்றங்கள் இருக்கும் என்றும் எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வு எடுக்க சொல்லும் என்று கூறப்படுகிறது.
எனவே இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் அந்த வேலையை தவிர்த்து விட்டு பகலில் வேலை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.