ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது பிரித்தானிய அரசாங்கம்

by Editor News

புகலிடக் கோரிக்கையாளர்களை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 140 மில்லியன் பவுண்டுகள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் ஒருமுறை 50 மில்லியன் பவுண்டுகளை செலுத்த பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு அமைச்சரின் இராஜினாமாவை அடுத்து இந்த திட்டத்தை புதுப்பிக்கும் வேலையை முடிப்பதாக பிரதமர் ரிஷி சுனக் சபதம் செய்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சில புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம், 2022 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சனால் கொண்டுவரப்பட்டது.

Related Posts

Leave a Comment