அதிகாலையில் எழும்புவதற்கு சிரமப்படுகின்றீர்களா..

by Editor News

தினசரி அதிகாலை வேளையில் தூக்கத்திலிருந்து எழுந்து விட வேண்டும் என்று பல காலமாக முன்னோர்கள், பல சாஸ்திரங்களும் வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறு அதிகாலையில் எழும்புவது வெறும் ஒழுக்கம் சார்ந்த விடயம் மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் ஆகும்.

இரவு முடிவடையும் அதிகாலை நேரமானது நிசப்தமான சூழல் நிலவும். இயற்கையின் அமைதியான இந்த நேரம் உடலுக்கும், மனதுக்கும் அமைதியை ஏற்படுத்தும் சமயம் ஆகும்.

வாகன இரைச்சல் இல்லாத அதிகாலை நேரத்தில் தூய்மையான காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு நன்மை அளிக்கின்றது.

அதிகாலை நேரத்தில் எழும்போது அதிக வெயில் இல்லாமல் குளிர்ந்த காலநிலை இருப்பதால், உடல் குளிர்ச்சியாக இருக்கின்றது.

மேலும் உடற்பயிற்சியினை மேற்கொள்வதற்கு அதிகாலை தான் சிறந்த நேரம் ஆகும். அதிகாலையில் எழுந்துவிட்டால் நாள் முழுவதும் சுறுப்புடன் இருப்பதுடன், அனைத்து வேலைகளையும் எந்த தடையும் இருக்காது.

Related Posts

Leave a Comment