100 வயதில் சபரிமலைக்கு சென்று ஆசையை நிறைவேற்றிய பாட்டி.!

by Editor News

100 வயதை எட்டிய பருகுடியம்மா என்ற மூதாட்டி தனது நீண்ட நாள் ஆசையான கன்னி மலையில் ஏறி சபரிமலைக்கு அடியெடுத்து வைப்பதை தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் சென்றடைந்தார். அவரது பேரன் கிரீஸ் குமார் மற்றும் அவரது குழந்தைகள் அம்ரிதேஷ், அன்விதா மற்றும் அவந்திகா ஆகியோருடன் இணைந்து பருகுடியம்மாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

இந்த பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது புனித யாத்திரைக்கு உதவியவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 1923 ஆம் ஆண்டு பிறந்த பருகுடியம்மாவின் நீண்ட நாள் சபரிமலை ஐயப்பன் கோயில் ஆசை இன்று நிறைவேறியது.

14 பேர் கொண்ட குழுவினருடன் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி மூணானக்குழியில் பயணத்தை தொடங்கி என்று அதிகாலை சன்னிதானம் அடைந்தார். இதில் அவரது பேரன் க்ரிஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறார்.

Related Posts

Leave a Comment