வெள்ளப்பாதிப்புகளை நேரில் காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்..!

by Editor News

தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் சுவடுகள் பல இடங்களில் வெள்ளங்களாக இன்றும் எஞ்சி நிக்கிறது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றாலும், சில எதிர்பாராத தாமதங்கள் நிகழுகின்றன.

இன்னும் 2 நாட்களில் ஒட்டுமொத்த சென்னையும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எப்போதும் தமிழக மக்களுக்காக துணை நிற்பார். இதுபோன்ற சோதனை மிகுந்த காலங்களிலும் அவர் நம்முடன் இருப்பார்.

நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை நேரில் காண வருகை தருகிறார் என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment