அமெரிக்க உதவியை ஒத்திவைத்தால் போரை இழக்கும் ‘பெரிய ஆபத்தை’ உக்ரைன் எதிர்கொள்ளும் !

by Editor News

காங்கிரசில் விவாதிக்கப்படும் கியிவ்க்கான அமெரிக்க உதவியை ஒத்திவைப்பது ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் தோல்வியை மேலும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான உக்ரைனின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகள் குறைந்து வருவதால் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்கு அமெரிக்காவிற்கு நேரமும் பணமும் இல்லாமல் போய்விட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

Related Posts

Leave a Comment