67
சென்னையில் நேற்று டிசம்பர் 4ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 5ஆம் தேதி கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.102 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.816 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.