பனைமரத்திலிருந்து பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. அவை யாவுமே உடலுக்கு மிகவும் குளிர்ச்சியைத் தரக் கூடியவை. அதிலும் பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச்சளி, இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்தாகும்.
இந்த பனங்கற்கண்டை வாயில் வைத்து சுவைக்கும்போது வரும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி ஆகியவை நீங்கும். பனங்கற்கன்டை பாலில் கலந்து காய்ச்சி குடித்துவர,நெஞ்சுச்சளி இளகி வெளியேறும்.
சிறிது வெங்காய சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக பிரச்சனைகள் தீரும். மேலும் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும். மேலும் பனங்கற்கண்டு ரத்த அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
கோடைகாலத்தில் இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தலாம். மேலும் இது சிறுநீரகக் கற்களை கரைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனுடன் பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் மேம்படும்.