யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

by Editor News

யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment