குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா..!

by Editor News

வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப விசாக்களுக்கான குறைந்தபட்ச வருமானமும் 38,700 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

2022 இல் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 745,000 ஆக உயர்ந்தகாக கடந்த மாதம் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Related Posts

Leave a Comment