முள்ளங்கியின் அற்புத பயன்கள்.!

by Editor News

காய்கறிகளில் அற்புத காய்கறியான முள்ளங்கியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே முள்ளங்கி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கஞ்சி செய்து குடித்தால் வீக்கம் மற்றும் சுவாச குறைபாடுகள் குணமாகும்.

பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்பு சேர்த்து காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டு விடுவதால் காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

தினமும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரக கற்கள் கரையும். மேலும் முள்ளங்கியை சாறு பிழிந்து 200 மில்லி அளவு எடுத்து குடித்து வர நீர் சுருக்கம் குணமாகும்.

அதேபோல் முள்ளங்கி இலை சாற்றை 5 மில்லி அளவு எடுத்து மூன்று வேளை தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், சிறுநீர் கட்டு போன்ற வாத நோய்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவும். அதனால் சிறுநீர் நன்றாக வெளியேறி பசியை உண்டாக்கும். குறிப்பாக மலச்சிக்கலை போக்கும் தன்மை உள்ளது.

Related Posts

Leave a Comment