குறைவடைந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதி வீதம்!

by Lankan Editor

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செப்டம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும் போது இது 13.13 வீதக் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஆடை, ரப்பர், ரப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் ஏற்றுமதி தேவை குறைவதால் பொருட்களின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உணவு மற்றும் பானங்களின் ஏற்றுமதி வருவாய் 2023 ஒக்டோபரில் 20.77வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் கடல் உணவுகளின் ஏற்றுமதி வருவாய் 3.73 வீதம் அதிகரித்து 20.29 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

மேலும், அலங்கார மீன்களின் ஏற்றுமதி வருமானம் ஒக்டோபர் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஒக்டோபரில் 35.71வீதம் அதிகரித்து 2.47 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment