75
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.
இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் கட்டர் அரசாங்கம் தனது முயற்சிகளை தொடரும் என கட்டர் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எகிப்து, அமெரிக்காவின் ஆதரவோடு கற்றல் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தம் 240 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 80 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுத்தது.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியதாக இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.