மிக்ஜாம் புயல் இன்று பிற்பகலில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் – பாலச்சந்திரன் பேட்டி

by Editor News

மிக்ஜாம் புயல் இன்று பிற்பகலில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் இன்று (04-12-2023) 0230 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, இது மிக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக இது உள்ளது. இன்று பிற்பகல் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும். சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும். இவ்வாறு கூறினார்.

Related Posts

Leave a Comment