127
பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் 6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளது
இதன்போது கட்டிடங்கள் குலுங்கியதுடன் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதேவேளை, கடந்த சனிக்கிழமையன்று 7.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது