அணையை திறப்பதில் ஆந்திர மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அணையின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் இரு மாநிலங்களுக்கு இடையே பொதுவாக நாகார்ஜுனா சாகர் என்ற அணையை திறப்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானா அரசால் போடப்பட்ட அணை கேட்டின் பூட்டுகள் ஆந்திர அரசு அதிகாரிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த அணையில் மொத்தமுள்ள 29 மதகுகளில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவுக்கும், மீதமுள்ள 16 மதகுகள் ஆந்திர மாநிலத்திற்கும் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதில் அணையின் பராமரிப்பு நிர்வாகம் தெலுங்கானா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அணையை திறப்பதில் ஏற்பட்ட முதல் நாள் இரு மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.