1979 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த பெயர் காரணமாகவே இவர் தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.
பல காட்சிகளில் இவர் நடித்திருந்தாலும் நடனம் மட்டுமே இவரை நிலைநிறுத்தி வைத்திருந்தது. இவரது நடனம் இல்லாத படம் எதுவும் இருக்காது. இவரது நடனம் இல்லாத திரைப்படத்தை விநியோகத்திற்கு கூட எடுக்க மாட்டார்கள்.
ஆகவே இவர் பல நட்சத்திரங்களுடன் நடித்த பெருமையையும் பெற்றுள்ளார். நடிகர் கமல் ஹாசனுடனும் இணைந்து இவர் ஒரு படம் நடித்திருந்தார். அதில் அவர்கள் ஆடிய ஒரு பாடம் பெருமளவில் ஹிட் ஆகியது.
அதையடுத்து நடிகர் கமல் ஹாசன் சில்க் ஸ்மிதாவிடம் நடித்த அனுபவத்தை பற்றி ஒரு நேர்காணலின் மூலம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
கமல் ஹாசனின் நேர்காணல் :
“என்னோடு சில்க் ஸ்மிதாவோடும் கவர்ச்சியான நடனக் காட்சி உண்மையில் படத்தில் இல்லை. ஆனால் அந்த காட்சியானது படத்திக் வணிகத்திற்காக சேர்க்கப்பட்டது. எந்த படத்திலும் எடுக்கப்படாத பாடலை மிகக் குறைந்த செலவில் எங்கள் இருவரை மட்டும் வைத்து படமாக்கினார் இயக்குநர்.
அவருக்கு உண்மையிலேயே நடனம் ஆட தெரியாது. நடத்தை கற்றுக்கொடுத்த பிரபு தேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டரின் நடனத்தை பார்த்து, அதற்கேற்ப நடனம் ஆடினார்.
இவர் ஒரு விடயத்தை கற்று அதை பின்பற்றுவதில் சிறந்தவர் எனலாம். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், அவருக்கு நாகரீக உணர்வு அதிகமாகவே இருந்தது. பேஷன் பத்திரிக்கைகள் அதிகம் படிப்பார்.
அவருக்கு சமைக்க தெரியாவிட்டாலும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்காக சமைக்க விரும்பினாள். பல கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் அவர் கடந்த வந்த பாதையை பற்றி சில்க் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்” என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.