4 மாநில தேர்தல் முடிவுகள்… யாருக்கு வெற்றி?

by Editor News

தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.

ராஜஸ்தானில் அனைத்து 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் அதிக இடங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கலாம் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அனைத்து 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பிஆர்எஸ் 55 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 64 தொகுதிகள் வரையிலும், பாஜகவிற்கு 13, ஏஐஎம்ஐஎம்-முக்கு 7 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ்க்கு 71 தொகுதிகளும், பிஆர்எஸ் கட்சிக்கு 51 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்இந்தியா கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 78 இடங்களும், பிஆர்எஸ்-க்கு 31 இடங்களும் கிடைக்கும என்பது தெரியவந்துள்ளது. பிஎஸ்ஜி நடத்திய கருத்துக்கணிப்பில் பிஆர்எஸ் 58 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 54 தொகுதிகள் வரையிலும் வெல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாக்சி-ஆரா-வின் கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 67 இடங்களும், பிஆர்எஸ்-க்கு 49 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டதற்கு பிறகு 2003ல் நடைபெற்ற முதல் தேர்தல் முதல் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வந்தது. இதற்கு கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68ல் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நடந்து முடிந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெரும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment