மேஷம்
இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கை துணை உள்ளிட்டோரிடம் அன்பாக இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சமநிலையான சூழ்நிலையை பராமரிப்பது அவசியம். வேலை தொடர்பான விஷயங்களில் இன்று நீங்கள் உறுதியுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். முதலீடு விஷயங்களில் கவனமாக இருந்தால் இன்று நீங்கள் நிதி பலன்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
உறவுகளுக்குள் இன்று அன்பையும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தின் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். இன்று நீங்கள் எதையும் தெளிவாகப் பேச வேண்டும் மற்றும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
மிதுனம்
இன்று தம்பதியர்கள் மற்றும் காதல் உறவுகளில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் எதிலும் அவசரம் காட்ட கூடாது. மேலும் தவறான புரிதல்களை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் உறவில் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். உங்கள் தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கடகம்
இன்று உங்களது திறமை மற்றும் படைப்பாற்றல் காரணமாக செல்வாக்கும், மதிப்பும் கூடும். எதிர்பாராத விஷ்யங்களில் இருந்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் உண்மை குணம் மற்றும் நடத்தையை எடைபோடும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு இன்று விடை கிடைக்கும்.
சிம்மம்
குடும்ப விவகாரங்களில் இன்று நீங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு நபருக்கு உதவ வேண்டிய அல்லது பாதுகாக்க வேண்டிய சூழலை எதிர்கொள்வீர்கள். உங்களது தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை இன்று பெறுவீர்கள். விடாமுயற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை காரணமாக பாராட்டுகளை பெறுவீர்கள். கோபத்தை குறைத்து அமைதியை கடைபிடியுங்கள்.
கன்னி
உங்கள் இல்லற வாழ்வில் ஸ்திரத்தன்மையை தக்க வைக்க இன்று நீங்கள் பாசம் மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தர கூடிய விஷயங்களில் ஈடுபாடு காட்டுங்கள். அதே போல பணியிடத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
உறவுகளுக்குள் காதல் மற்றும் அன்பு இன்று செழித்து வளரும். இதனால் இதுநாள் வரை நீடித்த மனக்கசப்புகள் இன்று மறையும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இதனால் உங்களது பணி நேரம் இன்று அமைதியாக அதே சமயம் உற்சாகமாக செல்லும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க வேண்டும். உணர்ச்சி ரீதியாக ஏற்பட்ட காயங்களில் இருந்து இதன் மூலம் விடுபடுவீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு உதவ இன்று வாய்ப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கையை பொறுத்த வரை முக்கிய விஷயங்களை வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது உங்கள் வளர்ச்சிக்கு நல்லது.
தனுசு
பழைய கசப்பான அனுபவங்களை மறக்க வேண்டிய நாள். புதிய காதல் வாய்ப்புகள் இன்று கிடைக்க கூடும். உங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வழிகாட்டுதல் மூலம் இன்று ஆதாயம் அடைவீர்கள். இன்று போதுமான பணவரவு இருக்கும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கடன் வாங்க கூடிய நிலை வரலாம். உங்களது கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள்.
மகரம்
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதில் இன்று கவனம் செலுத்துங்கள். உங்கள் வெற்றிகளை தனியாக கொண்டாடாமல் உங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து கொண்டாட சந்தர்பங்கள் அமையும். வியாபாரிகள் தங்கள் வணிக நடவடிக்கைகளில் வெற்றி மற்றும் நிதி பாதுகாப்பை பெறுவார்கள்.
கும்பம்
உறவுகளில் கடந்த காலம் ஏற்பட்ட வலிகளை மறக்கவும், புதிய காதல் வாய்ப்புகளை வரவேற்கவும் இன்று உறவை எதிர்பார்க்கும் கும்ப ராசிக்காரர்கள் தயாராக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபர்களுடன் பேசும் போது தெளிவாகவும், விவேகமாகவும் இருக்க வேண்டும். உங்களது பொருளாதார நிலை இன்று சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
மீனம்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காணப்படும். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் ஆதரவும் இன்று உங்களுக்கு கிடைக்கும். உங்களது சித்தனை மட்டும் படைப்பாற்றல் திறன் காரணமாக நன்மைகளை பெறுவீர்கள். உங்களை பந்தாட நினைக்கும் நபர்களை இன்று சாதுர்யமாக கையாளுவீர்கள்.