பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுப்வோர் மற்றும் கடல்வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காலப்பகுதியுடன் இணைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, நாளை மறுநாள் (03) புயலாக உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.