உடலில் எச்.ஐ.வி தொற்றைத் தடுக்கும் PrEP தடுப்பு மருந்து மிகவும் பயனுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் 24,000 பேரின் ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விபரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சுகாதார கிளினிக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே PrEP தடுப்பு எச்.ஐ.வி. மருந்தை எடுத்து வருகின்றனர்.
எச்.ஐ.வி தொண்டு நிறுவனமான டெரன்ஸ் ஹிக்கின்ஸ் அறக்கட்டளை இந்த மருந்தை எளிதாக அணுக வழிவகை செய்ய விரும்புகின்றது. ஏனெனில் பெண்கள் உட்பட பலருக்கு இந்த மருந்து இருப்பது தெரியவில்லை.
பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனை தேசிய சுகாதார சேவைகளுடன் இணைந்து இந்த சோதனைக்கு தலைமை தாங்கியது.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் ஜூலை 2020ஆம் ஆண்டுக்கு இடையில் இங்கிலாந்து முழுவதும் 157 பாலியல் சுகாதார கிளினிக்குகளில் இது மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் PrEP பயன்பாடு, எச்ஐவி வருவதற்கான வாய்ப்புகளை 86 சதவீதம் குறைத்தது. மருத்துவ பரிசோதனைகள் இது 99 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைத்தது.