சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.81.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூபாய் 720 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து 5870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,920க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,865க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.82.20க்கு விற்பனையாகிறது.