இன்றைய ராசி பலன்(30-11-2023)

by Editor News

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக அமையும். இன்று திட்டமிட்ட வேலைகளை செய்து முடிக்க முயற்சிப்பீர்கள் ஆனால் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியாது. இன்று உங்கள் மனதிற்குள் கோபம் எழுந்தாலும் அதை வெளியே காட்டாதீர்கள். அப்படி காட்டினால் உங்களது முக்கியமான காரியம் கெட்டு போகும்.

ரிஷபம்

கடந்த கால தவறுகளிலிருந்து நீங்கள் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்கள் இன்று உங்களை வழிநடத்தும். இன்று உங்கள் வாழ்வில் சில குழப்பமான சூழல் நிலவும். உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்றைய செலவுகளை ஈடுகட்ட போதுமான வருமானத்தை நீங்கள் பெறுவீர்கள்.

மிதுனம்

இன்று தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டினால் மன உளைச்சல் ஏற்படும் மற்றும் அவமானத்தை சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமத்தை சந்தித்தாலும் கூட, யார் உதவியையும் நீங்கள் கோர மாட்டீர்கள். இன்று உங்களுக்கு நிதி ஆதாயம் இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் இன்று கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களின் மீது இன்று உங்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கும். நாளின் முடிவில் சோர்வு இருக்கும்.

சிம்மம்

இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கழிப்பீர்கள். குடும்ப சூழல் அமைதியாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் தவறான புரிதல் அல்லது கோபத்தால் அமைதியின்மை ஏற்படலாம்.

கன்னி

இன்று நீங்கள் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் நாள் ஆனால் சிறந்த பலன்களை பெற நீங்கள் மதியம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அவசர அவசரமாக வேலை செய்வதால் தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. குறிப்பாக காகித வேலைகளை கவனத்துடன் செய்யாவிட்டால் பெரிய தவறு நடக்க வாய்ப்புகள் உண்டு.

துலாம்

இன்று எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்கு முன், கவனமாக சிந்தியுங்கள் அல்லது அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையை பெறுங்கள். முடிந்தால் இன்று எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். இன்று சில சோகமான செய்திகள் உங்களை மனவருத்தத்தில் ஆழ்த்தும்.

விருச்சிகம்

இன்று உங்களது தகவல் தொடர்புகள் அதிகரிக்கும். இதன் காரணமாக எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயமாக சில நன்மைகளை பெறுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சிந்தனை உங்கள் ஆளுமையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு மங்களகரமான நாளாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் குறையும். இன்று நீங்கள் பழைய விஷயங்கள் மற்றும் பழைய நாட்களை நினைத்து உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று நீங்கள் எந்த வேலையை செய்தாலும், அதில் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

கடந்த சில நாட்களை விட இன்றைய நாள் உங்களுக்கு மிக அமைதியான நாளாக இருக்கும். உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் வழிபாடு நடத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியையும் அமைதியையும் காண்பீர்கள். இன்று உங்கள் பணியிடத்தில் உற்சாகமான சூழல் நிலவும்.

கும்பம்

இன்று உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்து கொள்ள விரும்பினால் உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் விபத்துகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் மற்றும் பொறுமை அவசியம். இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுயநல உணர்வு வலுவாக இருக்கும். உங்கள் வேலையை செய்து முடிக்க பிறரை சிரமப்படுத்த நீங்கள் தயங்க மாட்டீர்கள். எனினும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நீங்கள் வெளிப்படையாக பேசினால் அவமானத்தை சந்திக்க நேரிடலாம்.

Related Posts

Leave a Comment