ஒவ்வொரு கிழமையும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. எந்த ஒரு காரியத்தையும் நாளை என தள்ளி வைத்தல் கூடாது. அதே நேரத்தில் நாம் சில முக்கியமான விஷயங்களைத் திட்டமிட்டு செய்வதுண்டு. திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகள் எப்படி சரியான நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து செய்கின்றோமோ, அதே போல் சில செயல்கள் திட்டமிட்டு அதற்குரிய நாட்களில் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும் என்று சில ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை:
அங்காரகன் எனும் செவ்வாய் பகவானுக்குரிய நாள். இந்த நாளில் புதிய வீடு கட்டுவதற்கான திட்டமிடலையும், பொருட்களை வாங்குவதற்கும், மனை பார்க்கவும் மிக உகந்த நாள். அதுமட்டுமல்லாமல் வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்கும், கம்பி போன்ற இரும்பு பொருட்களை வாங்க ஏற்ற நாள். உடல் நலக்குறைவுக்கு மருந்து எடுத்துக் கொள்ள விரைவில் உடல் நலம்
புதன் கிழமை:
பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பார்கள். அப்படி மிக விசேஷமாக பார்க்கப்படும் புதன் கிழமையில் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் அற்புத நாள். கல்விக்குரியவர் புதன் பகவான் என்பதால், அறிவு சார்ந்த பொருட்கள் வாங்குதல், கல்வி நிலையத்தில் சேருதல், புத்தகங்களை வாங்குதல், புதிய படிப்பை தொடங்குதல் போன்றவற்றிற்கு உகந்த நாள்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை மங்களம் நிறைந்த நாள். செல்வ செழிப்பு நிறைந்த நாளான வெள்ளிக் கிழமையில் மங்கள நிகழ்ச்சி நடத்துவதற்கும், கடன் வாங்குதல்,வாகனம் வாங்குதல், விலை உயர்ந்த பொருட்களான நகை ஆபரணங்கள் வாங்கவும் உகந்தது. இந்த நாளில் சுப செலவு செய்யலாம். இந்த நாள் சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும்.
சனிக்கிழமை:
சனி பகவானுக்குரிய சனிக்கிழமைகளில் வழக்கு தொடர்பாக விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வழக்கு குறித்த மனு தாக்கல் செய்யலாம். மருத்துவமனை செல்வதற்கும், வேளாண்மை சார்ந்த செயல்களில் ஈடுபட சிறப்பான நாள்.
ஒரு சில நாட்கள் சுபமுகூர்த்தம் இல்லாவிட்டாலும், நல்ல நாளாக இல்லாவிட்டாலும், விநாயகரை வணங்கி எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.