கனவுகளில் 2 முக்கிய கனவுகள் உள்ளன. கடந்த காலத்தில் வருவது ஒருவித கனவு… எதிர்காலத்தை குறிக்கும் வகையில் வருவது இரண்டாவது கனவு. இதில் தெய்வீக கனவுகளும் அடங்கும். அதிலும் சிலருக்கு குறிப்பாக விநாயகர் கனவில் வருவது வழக்கமாக இருக்கும். அப்படி யாருக்காவது கனவில் விநாயகர் வந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. கனவில் கடவுள் விநாயகர் வந்தால் அது நல்லது ஆகும். ஏனெனில் அவா் விக்னஹா்த்தா ஆவார். விக்னஹா்த்தா என்றால் தடைகளை அழிப்பவா் என்று பொருள். விநாயகர் இறைவன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியாரின் மகன் ஆவார். அவா் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறார்..
2. அதனால் மக்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் அல்லது எந்த ஒரு புனிதமான நிகழ்வுக்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டுதான் தொடங்குவா்.
3. தடைகளை தகர்ப்பவர் விநாயகர். அதனால் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா்.
4. ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறார் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை தொடங்கப் போகிறார் என்று பொருள்.
5. சில நேரங்களில் நாம் ஏற்கனவே எடுத்திருக்கும் உறுதிமொழிகளை நினைவுறுத்துவதற்காகவும், நமது கனவில் விநாயகர் வருவார் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருப்போம். ஆனால் அவற்றை செய்யாமல் மறந்து இருப்போம். ஆகவே இந்த நேரத்தில் நாம் மறந்ததை நினைவுபடுத்துவதற்காக விநாயகர் நமது கனவில் வருவார். ஆகவே நாம் ஏதாவது வாக்குறுதி அல்லது வேண்டுதல்கள் வைத்திருந்தால் அதை நிறைவேற்றாமல் இருந்துவிடக்கூடாது.
6. எலியுடன் விநாயகரை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க போகிறது என அர்த்தம்.
7. நீங்கள் உங்கள் கனவில் விநாயகர் மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் ஒரு சேர கண்டால் நீங்கள் செய்யும் செயல்கள் தடையில்லாமல் முடிந்து செல்வ செழிப்பும் அதிகரிக்கும். நீங்கள் நினைக்காத இடத்தில் இருந்து திடீர் லாபம் வந்து சேரும்.