28 மாதங்களில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்!!

by Editor News

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட10 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம்டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள்மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் திரு.ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்(ARE-03A) அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம்மதிப்பில் (வரிகள் உட்பட), கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 27.11.2023 துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்)என மொத்தம் 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடுபொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில்மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment