ஆன்லைன் பண பரிவர்த்தனையான கூகுள் பே என்று அழைக்கப்படும் ஜி பே செயலியின் மூலம் மொபைல் போனுக்கு ரீசார்ச் செய்தால் convenience fees வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
G Pay-ல் மொபைல் ரீசார்ச்
பே டி.எம் மற்றும் போன்பே போன்ற செயலிகளில் ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் கூகுள் பே மொபைல் ரீசார்ஜ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காததால் பலராலும் விரும்பப்பட்டது.
கூகுள் பே புதிய convenience fees குறித்து டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தனது X பக்கத்தில் கூறுகையில், G Pay-ன் சமீபத்திய மாற்றத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், ரூ.100 முதல் ரூ.200 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை என்றும் இருப்பினும் 200ரூபாய்க்கு மேல் ரீ சார்ஜ் செய்தால் கட்டணம் 2 ரூபாயாகவும், 300ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் 3 ரூபாயாகவும் வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
ஆனால் G Pay நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் அண்மையில் கடந்த நவம்பர் 10ம் ரீசார்ஜ் கட்டணங்களுக்கு என ‘கூகுள் ஃபீஸ்’ என்ற புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் பே நிறுவனத்தின் மற்ற சேவைகள் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற பிற பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனாலும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.