மல்லி சட்னி..!

by Editor News

தேவையான பொருட்கள்:

தேங்காய்- அரை கப்

பொட்டுக் கடலை- கால் கப்

பூண்டு- 1

இஞ்சி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 2

புளி- சிறிதளவு

கொத்தமல்லி- 1 கைப்பிடி

புதினா இலை- சிறிதளவு

உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்- சிறிதளவு

கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு

செய்முறை:

தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கிக்கொண்டு, அதனை் மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புளி, கொத்தமல்லி 1, புதினா, உப்பு அனைத்து சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்தால், சுவையான மணமணக்கும் தேங்காய் மல்லி சட்னி தயார்.

Related Posts

Leave a Comment