சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 80.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறாது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.