இன்றைய ராசி பலன்கள்(27-11-2023)

by Editor News

மேஷம்

புத்திசாலித்தனமான முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வந்தாலும் சேமிப்பதற்கு முன்னுரிமை வழங்கவும். வெற்றி பெறுவதற்கு அடிப்படை பொருளாதார விதிகளை பின்பற்றவும். லேசான தலைவலி ஏற்படலாம். உங்களது வாழ்க்கை முறையில் ஒரு மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது.

ரிஷபம்

ஒரு உறவிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க மனம் திறந்து பேசுவது ஒரு முக்கிய திறவுகோலாக அமைகிறது. உங்களது தற்போதைய வேலை குறித்த பலவிதமான சிந்தனைகள் மனதில் எழலாம். புதிய வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டிய நேரம் இது. பழைய முதலீடுகள், குறிப்பாக தங்கத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் மூலமாக பலன் பெறுவீர்கள்.

மிதுனம்

புதிய துவக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும். உங்களது கெரியரில் புதிய மைல்கல்லை அடைவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, போதுமான அளவு சேமிப்பது எதிர்கால பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும். ஆரோக்கியத்தை மேம்படுத்த நடை பயிற்சி மேற்கொள்ளவும்.

கடகம்

உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களிடம் நிலையான வருமானம் பெற்று தரக்கூடிய ஒரு வேலை இருந்தால், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய வேலைகளில் ஈடுபடவும். தேவையான நேரத்தில் ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள். குடும்பம் மற்றும் தனிப்பட்ட பொருளாதார தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும்.

சிம்மம்

புதிய உறவை தேடிக்கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும். பணியிடத்தில் தனித்து வேலை செய்வதை தவிர்க்கவும். பிறரை குறைவாக மதிப்பிடுவதன் மூலமாக ஒரு சில வாய்ப்புகளை இழப்பீர்கள். கடன்களை திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கவும். எப்பொழுதும் பாசிட்டிவான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும்.

கன்னி

கடந்த கால நினைவுகள் உங்களை மனதளவில் பாதிக்கலாம். எனினும் பிரகாசமான எதிர்காலத்திற்கு சுய பராமரிப்பு அத்தியாவசியமானது. வேலையைப் பொறுத்தவரை அதிகப்படியான பிடிவாதத்தை தவிர்க்கவும். அலட்சியமாக செலவு செய்வதை நிறுத்தவும். புத்திசாலித்தனமான பொருளாதார முடிவுகளை எடுங்கள். சோம்பேறித்தனத்தை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் இது.

துலாம்

புதிய காதல் மலர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே காதல் வயப்பட்டவர்கள் தங்களது காதலை கொண்டாடுவார்கள். கெரியரில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. மேல் அதிகாரிகள் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் பொருளாதார வெற்றியை தேடி தரும். உங்களது இலக்குகளை அடைவதில் கவனத்தை செலுத்தவும்.

விருச்சிகம்

ஷேர் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக உங்களது லாபத்தை பெருக்கலாம். எனினும் அது குறித்த முழு ஆய்வில் ஈடுபடுவதற்கு முன்பு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களது பழைய பழக்கங்களில் இருந்து விடுபட்டு, புதிய ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதற்கு ஊக்குவிக்க கூடிய ஒரு நபரை கண்டுபிடிங்கள்.

தனுசு

கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கைக்கு தயாராக வேண்டிய நேரம் இது. உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பிரமோஷன் அல்லது சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களது பணிக்குழுவில் புதிய நபர் சேரலாம். எப்பொழுதும் திறந்த மனதுடன் செயல்படவும். உங்களது பொருளாதார திட்டத்தை அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது நல்ல பலன் அளிக்கும். பழைய பழக்கங்களை கைவிட்டு, புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

மகரம்

உங்களது வாழ்க்கையில் புதிய நபர் நுழைவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. புதிய அனுபவங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது இலக்குகளில் முழு கவனத்தை செலுத்தவும். பொருளாதார முடிவுகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எடுக்கவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை பின்பற்றவும்.

கும்பம்

உங்களது பல நாள் கனவு நிஜமாவதற்கு சாத்தியங்கள் உள்ளது. கெரியரை பொருத்தவரை உங்களுக்கு விருப்பமான விஷயங்களை தேர்ந்தெடுத்து செய்யவும். சோர்வு உங்களை வாட்டி வதைத்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் எழலாம். பிரேக் எடுத்துக்கொண்டு, சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை வழங்கவும்.

மீனம்

புதிய வாய்ப்புகளை தேடுவதற்கான நேரம் இது. உங்களிடம் போதுமான அளவு சேமிப்பு அல்லது சொத்துக்கள் இருந்தாலும், உங்களது திறன்களை மேம்படுத்தி கொள்வது அவசியம். சரியான திட்டமிடல் மற்றும் மேலாண்மை மூலமாக உங்களது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நடனப் பயிற்சி அல்லது வேறு ஏதேனும் புதிய உடற்பயிற்சியில் ஈடுபடவும்.

Related Posts

Leave a Comment