பொரி உருண்டை ரெசிபி..!

by Editor News

தேவையான பொருட்கள் :

அவல் பொரி – 4 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு / நல்லெண்ணய் – 1 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை :

அவல் பொரியை முறத்தில் புடைத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை பொரி மொறுமொறுப்பாக இல்லை எனில் கடாயில் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக வெல்லப்பாகு காய்ச்ச கடாயில் ஒரு கப் வெல்லம் சேர்த்து 1/4 கல் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துவிடுங்கள்.

பின் அதை நன்கு காய்ச்ச பாகாக கரைந்து வரும். பின் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பாகு காய்ச்சி எடுத்ததும் அப்படியே வைத்தால் கெட்டிப்பட்டுவிடும். எனவே அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு நன்கு கலக்கினால் கெட்டியாகாமல் இருக்கும்.

பின் அதில் ஏலக்காய் பொடி, சுக்கு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.

கலந்ததும் உடனே பொரியை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதில் வாசனைக்கு ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்துவிடுகள். பின் கையில் நெய் தடவி சூடு ஆறுவதற்குள் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பொரி உருண்டை தயார்.

Related Posts

Leave a Comment