கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல் கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படவுள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் 14,000 போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி, ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய பெற்றோர் பெயர், போன் நம்பருடன் Wrist Band இணைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய ஃபேஸ் ட்ராக் மூலம் 60 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.